தமிழக செய்திகள்

வெண்ணந்தூர் அருகே ஓ.சவுதாபுரத்தில் ரூ.28 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

வெண்ணந்தூர் அருகே ஓ.சவுதாபுரத்தில் ரூ.28 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

தினத்தந்தி

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அடுத்த ஓ.சவுதாபுரம் பகுதியில் உள்ள ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க மையத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ஓ.சவுதாபுரம், ஓலைப்பட்டி, செம்மாண்டப்பட்டி, அலவாய்ப்பட்டி, நடுப்பட்டி, பழந்தின்னிபட்டி, தொட்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். ராசிபுரம், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து பருத்தியை ஏலத்தில் எடுத்தனர். இந்த ஏலத்தில் சுரபி ரக பருத்தி 815 மூட்டைகள் கொண்டு வரப்பட்டு குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8,220 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டாலுக்கு ரூ.9,510 வரை விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் ரூ.28 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு