தமிழக செய்திகள்

வெடிமருந்து குடோனில் பயங்கர தீ விபத்து: குவாரி நிர்வாகம் சார்பில் ரூ.12 லட்சம் நிவாரணம்

வெடிமருந்து குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினத்தந்தி

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் இருந்து கீழ உப்பிலிக்குண்டு செல்லும் சாலையில் கல்குவாரி உள்ளது. இந்த குவாரிக்கு அருகே இருந்த குடோன் அறையில் பாறைகளை தகர்க்க பயன்படுத்தும் வெடிமருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன.

இந்த வெடிமருந்து குடோனில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் 1 கி.மீ. தூரத்தில் தூக்கி வீசப்பட்டு, சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக குவாரி உரிமையாளர் ராஜ்குமார், பங்குதாரர் சேது ஆகியோர் மீது ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பங்குதாரர் சேதுவை கைது செய்தனர். ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், வெடிமருந்து குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ரொக்கமாக ரூ.50 ஆயிரம், காசோலையாக ரூ.11.50 லட்சம், உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் வழங்கப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்