தமிழக செய்திகள்

திருப்பூரில் ரூ.56 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர்

திருப்பூரில் ரூ.56 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலை கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் முடிவற்ற திட்டங்களை துவங்கி வைத்துள்ளார்.

இந்த விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக 222 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை, மாவட்ட தொழில் மையம் சார்பில் நீட்ஸ் திட்டத்தில் 23 பேருக்கு தொழில் கடன் உதவி, மகளிர் திட்டம் சார்பில் 1339 பேருக்கு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் நிதி உதவி, சமூகநலத்துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 4335 பேருக்கு ரூ.55.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை