தமிழக செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

தினத்தந்தி

தருமபுரி,

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து காணப்பட்டது. இதனால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, கடந்த 3 நாட்களாக கபினி நீர்பிடிப்பு பகுதி மற்றும் மண்டியா மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளன. இதனால், அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் நேற்று முன் தினம் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில், தமிழக காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைந்துள்ளது. நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று 16 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் குறைந்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்