தமிழக செய்திகள்

ஏரியில் மூழ்கி சிறுமி சாவு

கிருஷ்ணகிரி அருகே துணி துவைத்த போது ஏரியில் தவறி விழுந்து சிறுமி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தாள்.

தினத்தந்தி

ஏரியில் மூழ்கி சாவு

கிருஷ்ணகிரி அருகே கோடிப்பள்ளி பக்கமுள்ள சீலேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். தொழிலாளி. இவரது மகள் லாவண்யா (வயது 18). தந்தை இறந்து விட்டதால் தாயார் முனிலட்சுமியின் பராமரிப்பில் சிறுமி இருந்தாள். நேற்று முன்தினம் சிறுமி துணி துவைப்பதற்காக மலைச்சந்து பகுதியில் உள்ள கரடிமலை ஏரிக்கு சென்றாள்.

அங்கு துணிகளை துவைத்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் லாவண்யா ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தாள். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் லாவண்யாவின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அங்கிருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து லாவண்யாவின் தாயார் முனிலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஏரியில் மூழ்கி சிறுமி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு