தமிழக செய்திகள்

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் அடுத்த 2 வாரங்களில் விண்ணில் ஏவப்படும்; இஸ்ரோ தலைவர் சிவன்

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் அடுத்த 2 வாரங்களில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைகோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட் திட்டமிட்டபடி சரியான பாதையில் பயணித்து ஒவ்வொரு கட்டமாக வெற்றிகரமுடன் கடந்து சென்றது. இந்த செயற்கை கோள் 36 ஆயிரம் கி.மீ. தொலைவில் விண்ணில் நிலை நிறுத்தப்படும்.

இதுபற்றி இஸ்ரோ தலைவர் சிவன் கூறும்பொழுது, விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்-29 செயற்கைக்கோளில் இருந்து நாளை காலை 8.30 மணி முதல் சிக்னல் கிடைக்கும்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்காக அடுத்த ஆண்டு சில செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும். அடுத்த 2 வாரங்களில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என தெரிவித்துள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்