காரைக்கால்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வேட்டக்காரன் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் கௌரி மனோகரியின் மகன் கவுசிக்(வயது17). இவர் காரைக்கால் தருமபுரம் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை கோட்டுச்சேரியை அடுத்த திருவேட்டக்குடியில் உள்ள குளத்தில் தனது நாயை குளிப்பாட்டுவதற்காக நண்வர்களுடன் கவுசிக் சென்றுள்ளார். குளத்தில் நாயுடன் கவுசிக் குளித்து கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு நாய் சென்றுவிட்டது. இதனால் நாயை பிடித்து கரைக்கு கொண்டு வருவதற்காக கவுசிக்கு சென்றுள்ளார்.
அப்போது குளத்தின் மைய பகுதிக்கு சென்ற போது மூச்சு திணறி நீரில் மூழ்கி உள்ளார். இதனை அறிந்த அவரது நண்வர்கள் குளத்தில் மூழ்கிய கௌசிக்கை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
பின்னர் இது தொடர்பாக காரைக்கால் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், விரைந்துவந்த தீயணைப்புத்துறை வீரர்கள், குளத்தின் சேறில் சிக்கி உயிரிழந்து கிடந்த கௌசிக் உடலை கைபற்றி கரைக்கு கொண்டுவந்தனர். பின்னர் அவரது உடல் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த தகவல் அறிந்த கோட்டுச்சேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.