கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்ப பணிகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்ப பணிகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அணுசக்தி துறையின் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் கல்பாக்கம், தாராப்பூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையங்களில் பிட்டர், வெல்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளுக்கான பயிற்சி பெற வெளியிடப்பட்டுள்ள ஆள்தேர்வு அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் சமூகநீதிக்கு எதிராக அமைந்துள்ளன.

தமிழர்களுக்கு அப்பணிகள் கிடைத்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் கடுமையான நிபந்தனைகள் திணித்திருப்பது கண்டிக்கத்தக்கது. கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு தேர்ந்தெடுக்கப்படவிருப்பவர்கள் அனைவரும் தொழில்நுட்ப பணியாளர்கள்தான் என்பதால், அந்த பணியிடங்கள் அனைத்தையும் தமிழகத்தை சேர்ந்த தகுதியான மாணவர்களை கொண்டு நிரப்ப மத்திய அரசு முன்வர வேண்டும்.

தமிழக மாணவர்களின் வேலைவாய்ப்பு உரிமை சார்ந்த இக்கோரிக்கையை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்