தமிழக செய்திகள்

சுவர் இடிந்து தொழிலாளி சாவு

அம்பையில் சுவர் இடிந்து தொழிலாளி இறந்தார்.

அம்பை:

அம்பை முடப்பாலம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருடைய மகன் முருகன் (வயது 35), கட்டிட தொழிலாளி. இவர் அம்பையில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு உடனடியாக அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முருகன் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை