தமிழக செய்திகள்

‘சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு என்று சொல்வதில் ஒரு கொடிய அச்சுறுத்தல் இருக்கிறது’ - சீமான் ஆவேசம்

பாதுகாப்பற்ற சூழலில் சிறுபான்மை மக்களை வாழ வைத்திருக்கிறீர்களா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் சீமான் பேசியதாவது;-

“என் அன்பு சகோதரன் ஏ.ஆர்.ரகுமானை சிறுபான்மை என்று சொல்கிறார்கள். அதே சமயம், ஏ.ஆர்.ரகுமானின் சொந்த அக்கா மகன் ஜி.வி.பிரகாஷ் இந்து என்பதால் அவரை பெரும்பான்மை என்று சொல்கிறார்கள். தாய்மாமன் சிறுபான்மை, மருமகன் பெரும்பான்மையா?

இசைஞானி இளையராஜா இந்து. அவரது மகன் யுவன் சங்கர் ராஜா இஸ்லாமிய மதத்தை ஏற்றுள்ளார். எனவே அப்பா பெரும்பான்மை, மகன் சிறுபான்மையா? மதத்தை வைத்து எப்படி மனிதர்களை மதிப்பிடுகிறார்கள்?

நாங்கள்தான் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்கள் என்று சிலர் சொல்கிறார்கள். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு என்று சொல்லும்போது அந்த சொல்லில் ஒரு கொடிய அச்சுறுத்தல் இருக்கிறது. பாதுகாப்பற்ற சூழலில் அவர்களை வாழ வைத்திருக்கிறீர்களா? ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பாதுகாப்புதான் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் உள்பட எல்லாருக்குமான பாதுகாப்பு.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கணவர் 'குரங்கு’ என்று அழைத்ததால் மாடல் அழகி தூக்கிட்டு தற்கொலை

அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா துணை முதல்-மந்திரி ஆகிறார்?

மத்தியபிரதேசம்: கார் மீது லாரி மோதி கோர விபத்து - 4 பேர் பலி

சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

குவைத்தில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; குஜராத்தில் தரையிறக்கம்