தமிழக செய்திகள்

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை - கலெக்டர் அலுவலகம் தகவல்

சென்னையில் 2-வது நாளாக விடிய விடிய மிதமான மழை பெய்து வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு - மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்திருக்கிறது.

அந்த வகையில் இன்று (22-11-2023) முதல் நாளை மறுதினம் (24-11-2023) வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை 2-வது நாளாக விடிய விடிய மிதமான மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காலை நிலவரப்படி தற்போது வரை பரவலாக மிதமான மழை மட்டுமே பெய்துள்ளது என்றும் அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?