தமிழக செய்திகள்

கோலத்தின் கருத்து அலங்கோலமாக இருந்ததால் கைது செய்யப்பட்டிருக்கலாம் - அமைச்சர் பாண்டியராஜன்

கோலத்தின் மூலம் சொல்லப்பட்ட கருத்து அலங்கோலமாக இருந்ததால் 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பெசன்ட் நகர் பகுதியில் கோலம் போட்ட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்

இந்த நிலையில் கோலம் மூலம் கூறப்பட்ட கருத்து வன்முறையைத் தூண்டுவது போல் இருந்தால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என அமைச்சர் பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோலம் போட்டதற்காக யாரும் கைது செய்யப்படவில்லை. கோலத்தின் மூலம் கூறப்பட்ட கருத்து அலங்கோலமாக இருந்தததால் கைது செய்யப்பட்டிருக்கலாம்.

கோலத்தின் மூலம் கூறிய கருத்து வன்முறையை தூண்டுவது போல் இருந்தால் கைது செய்ய வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை