தமிழக செய்திகள்

பாளையங்கோட்டையில் 11 அம்மன்களுக்கு தீர்த்தவாரி

பாளையங்கோட்டையில் சூரசம்ஹாரத்தை தொடர்ந்து 11 அம்மன்களுக்கு தீர்த்தவாரி நடந்தது.

தினத்தந்தி

நெல்லை மாநகரில் அம்மன் கோவில்களில் தசரா திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது இதில் பாளையங்கோட்டையில் ஆயிரத்தம்மன், முத்தாரம்மன் உள்பட 11 அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் 11 அம்மன்களும் சப்பரங்களில் எழுந்தருளினார்கள். நள்ளிரவு பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள எருமைகிடா மைதானத்தில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் நிறைவாக நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. 11 அம்மன்களும் தனித்தனியாக சப்பரங்களில் எழுந்தருளி வண்ணார்பேட்டை பேரூராட்சி அம்மன் கோவில் அருகே தாமிரபரணி ஆற்றுக்கு வந்தனர். அங்கு அம்மன்களுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்