தமிழக செய்திகள்

வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

தினத்தந்தி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையில் வேகமாக நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கொடுமுடியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

52.50 அடி கொள்ளளவு கொண்ட அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக கொடுமுடியாறு அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு