தமிழக செய்திகள்

தூயமிக்கேல் அதிதூதர் ஆலய சப்பர பவனி

தூயமிக்கேல் அதிதூதர் ஆலய சப்பர பவனி நடந்தது.

தினத்தந்தி

தொண்டி, 

திருவாடானை தாலுகா ஆண்டாவூரணியில் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் தினமும் நவநாள் திருப்பலியும், அருட் தந்தையர்களால் சிறப்பு மறையுறையும் நிகழ்த்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியை அருட்தந்தை மரிய சிங்கராயர், ஆண்டாவூரணி பங்குத்தந்தை அந்தோணி மைக்கேல் ஆகியோர் தலைமையில் அருட் தந்தையர்கள் நிறைவேற்றினர். தொடர்ந்து மின்விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் தூய மிக்கேல் அதிதூதர், புனித சந்தியாகப்பர், இன்னாசியார், புனித சவேரியார், புனித சூசையப்பர், அன்னை மரியாள் ஆகியோர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பவனியாக வந்து பொதுமக்களுக்கு இறை ஆசீர் வழங்கினர். திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக் கோட்டை மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்