தமிழக செய்திகள்

தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி பயணிகள் ரெயில் நாளை முதல் ஏப்ரல் 4-ந் தேதி வரை ரத்து

தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி பயணிகள் ரெயில் நாளை முதல் 4-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தூத்துக்குடி ரெயில் நிலைய பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்காக ரெயில்வே தண்டவாளத்தை உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி இடையேயான ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி வாஞ்சிமணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு இரவு 9.05 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (56724) நாளை (வியாழக்கிழமை) முதல் 4.4.25 வரையும், தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சிக்கு இரவு 10.35 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (56725) நாளை முதல் 4.4.25 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதே போன்று வாஞ்சிமணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு காலை 3 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (56726) நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் 5.4.25 வரையும், தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சிக்கு காலை 8.30 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (56723) நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் 5.4.25 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்