தமிழக செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. குருப்-1 தேர்வு முறைகேடு: சி.பி.ஐ.க்கு மாற்ற கோரி தி.மு.க. வழக்கு

டி.என்.பி.எஸ்.சி. குருப்-1 தேர்வு முறைகேடு பற்றிய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரி தி.மு.க. வழக்கு தொடர்ந்து உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2015ம் ஆண்டு குரூப் 1 பதவிகளுக்கான தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இது குறித்து விசாரிக்க மத்திய குற்ற பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களில், 62 பேர் இரு தனியார் பயிற்சி மையங்களில் படித்து, லஞ்சம் கொடுத்து அரசு வேலைக்கு சேர்ந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்