தமிழக செய்திகள்

செல்போன் கடை உரிமையாளரிடம்6½ பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது

செல்போன் கடை உரிமையாளரிடம் 6½ பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டா.

தினத்தந்தி

ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரகு (வயது 36). இவர் மேட்டூர் ரோட்டில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி இவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இவரை தாக்கிவிட்டு கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதைத்தொடர்ந்து ரகு இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரகுவிடம் சங்கிலியை பறித்துச்சென்ற ஈரோடு பழைய கரூர் ரோடு கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்த பூபதி என்கிற பிரபாகரன் (30) என்பவரை கடந்த 13-ந்தேதி கைது செய்தனர். இந்த நிலையில் மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சி ரோடு பகுதியை சேர்ந்த லோகேஷ் என்கிற குட்டசாக்கு (23) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு