தமிழக செய்திகள்

தி.மு.க.வில் இருந்து தற்காலிக நீக்கத்தை வாபஸ் பெற வேண்டும்; மு.க.ஸ்டாலினுக்கு, கு.க.செல்வம் கடிதம்

தி.மு.க.வில் இருந்து தற்காலிக நீக்கத்தை வாபஸ் பெற வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு, கு.க.செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ. கு.க.செல்வம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தங்களுடைய 5-8-2020 தேதியிட்ட நோட்டீஸ் கிடைக்கப்பெற்றது. கிடைத்த 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும், பதில் அளிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், நடவடிக்கை எடுத்து என்னை தற்காலிகமாக நீக்கி வைத்துள்ளீர்கள். ஆகவே, என் பதில் கிடைக்கும் முன்னரே நான் குற்றவாளி என்று ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே தங்களின் தற்காலிக நீக்கத்தை வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். சட்டப்படி விசாரணை வைத்தால், விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்