கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

நாகை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

மழை காரணமாக நாகை மாவட்டத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

நாகை,

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 12-ந் தேதி (இன்று) தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

.இந்நிலையில், மழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடர் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக திருவாரூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தவிர இன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்