தமிழக செய்திகள்

சென்டிரல்- சூலூர்பேட்டை இடையே இன்று ரெயில் ரத்து

சென்டிரல்- சூலூர்பேட்டை இடையே இன்று ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் தடா, சூலூர்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (செவ்வாய்க்கிழமை) பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து இன்று அதிகாலை 5.40 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும், சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 12.35 மணிக்கு சென்டிரல் வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டையில் இருந்து காலை 7.50 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து காலை 10.20 மணிக்கு சூலூர்பேட்டை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. சூலூர்பேட்டையில் இருந்து காலை 6.45 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயில் பகுதி நேரமாக சூலூர்பேட்டை-எளாவூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டையில் இருந்து காலை 7.25 மணிக்கு கடற்கரை செல்லும் மின்சார ரெயில் பகுதிநேரமாக சூலூர்பேட்டை-எளாவூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை