தமிழக செய்திகள்

தனியார் நிலத்தில் குடியிருக்கும் பழங்குடியின மக்கள் பத்திரப்பதிவு செய்து கொள்ள ஒப்புதல்

தனியார் நிலத்தில் குடியிருக்கும் பழங்குடியின மக்கள் பத்திரப்பதிவு செய்து கொள்ள ஒப்புதல் அளித்து அதற்கான ஆவணங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

தினத்தந்தி

பொன்னேரி தாலுகாவில் உள்ள ஒரக்காடு கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான புஞ்சை நிலத்தில் பழங்குடி மக்கள் 30 வீடுகள் கட்டி பல வருடங்களாக வசித்து வருகின்றனர். இந்த இடத்திற்கு பட்டா வழங்க கோரி பொன்னேரி கோட்டம் ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் சித்ராவிடம் பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் சித்ரா தனியார் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஞானசவுந்தரி, சித்ரா, கண்ணன் ஆகியோர் இங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் பத்திரப்பதிவு மற்றும் பட்டா பெயர் மாற்றம் செய்து கொள்ள வசதியாக ஒரு ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்து அதற்கான ஆவணங்களை ஒரக்காடு ஊராட்சி மன்ற தலைவர் நீலாசுரேஷ் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர் சர்மிளாவிடம் ஒப்படைத்தனர். அப்போது ஊராட்சி மன்ற துணைத்தலைவர் லட்சுமணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்