தமிழக செய்திகள்

கல்யாண மரகதீஸ்வரர் கோவிலில் திருவீதி உலா

கல்யாண மரகதீஸ்வரர் கோவிலில் திருவீதி உலா நடைபெற்றது.

தினத்தந்தி

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே முன்னூர் மோளபாளையத்தில் பிரசித்தி பெற்ற மரகதவள்ளி, கல்யாண மரகதீஸ்வரர் மற்றும் உத்தண்ட வேலாயுதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதாமாதம் அமாவாசை, கிருத்திகை, பவுர்ணமி ஆகிய தினங்களில் சிறப்பு பூஜை நடைபெறும். மேலும் ஆண்டுதோறும் மாசிமக திருவீதிஉலா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் மாசிமக திருவீதி உலா நடந்தது. கடந்த 5-ந் தேதி இரவு 8 மணிக்கு மோளபாளையத்திலிருந்து கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் கொண்டு வந்தனர். அன்று இரவு காவிரி தீர்த்தம் மூலம் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அன்று இரவு 9 மணிக்கு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கு மூலம் மோளபாளையம் ஊருக்குள் திருவீதி உலா கொண்டு சென்றனர். அப்போது ஊர் பொதுமக்கள் சார்பில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இடைவிடாது அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கரூர் இந்து சமய அறநிலையத்துறை தக்கார் ஹேமலதா, முன்னூர், குப்பம், க.பரமத்தி, நெடுங்கூர் ஆரியூர், இலக்கமநாயக்கன்பட்டி, கம்பளியம்பட்டி மற்றும் பூந்தளிர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை க.பரமத்தி போலீசார் செய்திருந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு