தமிழக செய்திகள்

லாரிகள் கவிழ்ந்தன; டிரைவர்கள் உயிர் தப்பினர்

லாரிகள் கவிழ்ந்த சம்பவத்தில் டிரைவர்கள் உயிர் தப்பினர்.

தினத்தந்தி

கொள்ளிடம் டோல்கேட்:

திருச்சி மாவட்டம், சிறுகாம்பூர் அருகே திருச்சி - நாமக்கல் நெடுஞ்சாலையில் கும்பகோணத்தில் இருந்து கோயமுத்தூர் நோக்கி பஞ்சு மூட்டை ஏற்றி வந்த லாரியும், எதிரே பெங்களூரில் இருந்து திருச்சி நோக்கி தக்காளி ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது போல் வந்ததால், டிரவர்கள் பிரேக் பிடித்தனர். இதில் கட்டுப்பாட்டை இழந்த ஒரு லாரி சாலையோர பள்ளத்திலும், மற்றொரு லாரி அய்யன் வாய்க்காலுக்குள்ளும் கவிழ்ந்தன. இதில் 2 டிரைவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து வாத்தலை போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்