தமிழக செய்திகள்

மராட்டியத்தில் பெட்ரோல்- டீசல் மீதான வரி குறைய வாய்ப்பு

2021-2022-ம் ஆண்டுக்கான மராட்டிய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பெட்ரோல்- டீசல் மீதான வரி குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தினத்தந்தி

மும்பை,

கொரோனா தொற்று காரணமாக உலகமே கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. மராட்டிய அரசும் அதிக கடன் சுமையையும், வரி வருவாய் இழப்பையும் சந்தித்தது. இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

இதில் மராட்டியத்தை பொறுத்தவரை நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 8 சதவீதமாக இருக்கும் என மாநில அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று (8-ந் தேதி) காலை 2021-22-ம் ஆண்டுக்கான மராட்டிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான அஜித்பவார் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து உள்ளதால் பட்ஜெட்டில் கவர்ச்சி திட்டங்கள், சலுகைகள் எதுவும் இடம்பெற வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில் பட்ஜெட்டில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த அதிக நிதிஒதுக்கப்படலாம் என தெரிகிறது. இதேபோல முதலீடுகளை திரட்டுவது, சமூக திட்டங்களை முன்னெடுப்பது, உள்கட்டமைப்பு, தொழில் வளாச்சியில் பட்ஜெட்டில் அதிக முன்னுரிமைகள் கொடுக்கப்படலாம்.

அதே நேரத்தில் மாநில அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. ஆட்சியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கும் வகையில் மாநில அரசு அதற்கான வாட், செஸ் வரியை குறைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு