தமிழக செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு சீருடை

சீர்காழியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.

தினத்தந்தி

சீர்காழி:

சீர்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமை தாங்கினார். மேலாளர் காதர்கான், சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். துப்புரவு பணி மேற்பார்வையாளர் வீரப்பன் வரவேற்றார். தூய்மை பணியாளர்களுக்கு நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் சீருடைகளை வழங்கி பேசினார். தொடர்ந்து சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தின் பின்புறம் தேங்கியுள்ள கழிவு நீரை தானாக முன்வந்து அகற்றிய தூய்மை பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரிந்த பன்றிகளை பிடிப்பதற்கு உறுதுணையாக இருந்த தூய்மை பணியாளர்களுக்கும் சிறப்பு பரிசுகளை வழங்கினார். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், வேல்முருகன், சாமிநாதன், நகராட்சி கள உதவியாளர் சீதாலட்சுமி, துப்புரவு மேற்பார்வையாளர்கள் கலியபெருமாள், அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்