தமிழக செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக வேல்ராஜ் நியமனம் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் ஆர். வேல்ராஜை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பா ஓய்வு பெற்றதையடுத்து, புதிய துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதும் இருந்து 160 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதையடுத்து புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் உள்பட 3 பேர் கொண்ட தேடல் குழு அமைக்கப்பட்டது.

துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த 160 பேரில், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 5 பேர் உள்பட தகுதி வாய்ந்த 10 பேரை தேடல் குழு இறுதி செய்தது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். பதவிக்காலம் முடிந்து சூரப்பா ஓய்வு பெற்றதை தொடர்ந்து டாக்டர் வேல்ராஜ் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலை. துணைவேந்தராக வேல்ராஜ், 3 ஆண்டுகள் பதவி வகிப்பார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்