தமிழக செய்திகள்

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பேச்சிப்பாறை-கோதையார் சாலையை சீரமைக்கக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி

குலசேகரம், 

பேச்சிப்பாறை சீரோபாயிண்ட் முதல் கோதையாறுக்கு சொல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் பேச்சிப்பாறை சீரோ பாயிண்ட் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆப்பாட்டத்துக்கு பேச்சிப்பாறை ஊராட்சி நாம் தமிழர் கட்சி தலைவர் சுபாஷ் தலைமை தாங்கினார். குமரி மத்திய மாவட்ட செயலாளர் சீலன் முன்னிலை வகித்து ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார். ஊராட்சி செயலாளர் சகில்குமார், கட்சி நிர்வாகிகள் கனகமணி, ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளவங்கோடு தொகுதி தலைவர் பிரின்ஸ் டேவிட், பத்மநாபபுரம் தொகுதி துணைத்தலைவர் ரெஞ்சித், பத்மநாபபுரம் தொகுதி மகளிர் பாசறை செயலாளர் ரேகா ராஜ் வினு, இணை செயலாளர் மரியசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்