தமிழக செய்திகள்

வெல்டிங் உரிமையாளர் முன்னேற்ற சங்க முப்பெரும் விழா

வெல்டிங் உரிமையாளர் முன்னேற்ற சங்க முப்பெரும் விழா நடைபெற்றது.

தினத்தந்தி

அரியலூர் மாவட்ட தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு கூட்டம், சங்க கொடியேற்றம், தொழிலாளர் அடையாள அட்டை வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட கவுரவத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட தலைவர் முரளிதரன் முன்னிலை வகித்து பேசினார். முன்னதாக அரியலூர் மாவட்ட செயலாளர் கொளஞ்சியப்பா வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநிலத் தலைவர் வெங்கடேசன் சங்க செயல்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், உடையார்பாளையம், தா.பழூர், மீன்சுருட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் சங்க கொடியினை ஏற்றி வைத்தார். இதில் மாநிலச் செயலாளர் பாலாஜி, மாநில பொருளாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு சங்க அடையாள அட்டையை வழங்கினர். கூட்டத்தில் மின் கட்டணம் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இரும்பு விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன. இதில் ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், உடையார்பாளையம், மீன்சுருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வெல்டிங் பட்டறை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு