தமிழக செய்திகள்

கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

உப்புக்கோட்டை அருகே கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகையை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

தினத்தந்தி

வீரபாண்டி அருகே உள்ள தர்மாபுரி பசும்பொன் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 37) விவசாயி இவரது மனைவி தேவி. நேற்று இரவு இவர்கள் 2 பேரும் தேனியில் இருந்து மேட்டார்சைக்கிளில் தர்மாபுரிக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை ஈஸ்வரன் ஓட்டினார். தேவி பின்னால் அமர்ந்திருந்தார்.

தேனி-கம்பம் சாலையில் வீரபாண்டி அருகே வந்தபோது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் 3 பேர் வந்தனர். ஒருகட்டத்தில் மர்மநபர்கள் தேவி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து ஈஸ்வரன் வீரபாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு