தமிழக செய்திகள்

மொபட் விழுந்ததில் கோழி முட்டைகள் உடைந்து நாசம்

முத்தையாபுரம் அருகே மொபட் விழுந்ததில் கோழி முட்டைகள் உடைந்து நாசமாகின.

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 54). இவர் கீதாநகர், அபிராமிநகர், எம்.சவேரியார்புரம், முள்ளக்காடு பகுதியில் உள்ள மளிகைக்கடை மற்றும் ஓட்டல்களுக்கு முட்டைகளை தனது மொபட்டில் சென்று விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று கீதாநகர் பகுதியில் முட்டைகளை கடைகளுக்கு விற்பனை செய்ய வந்தார். அங்குள்ள வேகத்தடையில் வந்தபோது அவரது மொபட் திடீரென நிலை தடுமாறியது. இதனால் அவரது மொபட் கீழே சரிந்து விழுந்ததில் விற்பனைக்கு வைத்திருந்த முட்டைகள் கீழே விழுந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.6 ஆயிரம் என்று கூறப்படுகிறது. அப்போது அக்கம்பக்கத்தினர் சாலையில் விழுந்த சேதமடையாத முட்டைகளை எடுத்து அவரிடம் கொடுத்தனர். முட்டை வியாபாரியின் மொபட் கீழே விழுந்ததில் சேதமடைந்த முட்டைகள் சாலையில் எங்கும் சிதறி கிடந்தது. இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை