மதுரை,
மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"விஜய் எங்களை திட்டும்போது நாங்கள் அவருக்கு பதிலளிக்காமல் இருக்க முடியுமா? விஜய் அறைக்குள் உட்கார்ந்து கொண்டு அரசியல் பேசுவது நியாயமா? பொதுவாழ்க்கையில் இதுபோன்ற ஒரு நடைமுறையை நாங்கள் இதுவரை சந்தித்ததே இல்லை.
அ.தி.மு.க.வில் சேர்க்குமாறு ஓ.பன்னீர்செல்வம் கேட்பதற்கு ஒரு முறை இருக்கிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்தவருக்கு எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்பது தெரியாதா? தன்னை சேர்க்க வேண்டும் என்று ஊடகங்கள் வழியாகத்தான் கேட்க வேண்டுமா?
ஓ.பன்னீர்செல்வம் நாடகம் நடத்துகிறார். அதனைப் பார்த்து மக்கள் சலித்துவிட்டார்கள். ஊடகத்தில் பேசிப்பேசி தான் அவர் இப்படி ஆகிவிட்டார். அவரது செயல்பாடுகள் அவருக்கு பின்னால் இருப்பவர்களையும் பாதிக்கிறது.”
இவ்வாறு செல்லூர் ராஜு தெரிவித்தார்.