தமிழக செய்திகள்

தொழிற்சாலை மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

தொழிற்சாலை மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை கிராமத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. அங்கு உத்தரபிரதேச மாநிலம் செல்தான்பூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (21) என்பவர் தங்கி லிப்ட் ஆப்பரேட்டராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் சந்தோஷ் குமார் அந்த தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தொழிற்சாலையின் உரிமையாளர் பாலாஜி, பழுதடைந்த மேற்கூரையை சரி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

சந்தோஷ்குமார் மேற்க்கூரையின் மீது ஏறி பழுதை சரி செய்து கொண்டிருக்கும் போது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து மப்பேடு போலீசார் அந்த தனியார் தொழிற்சாலையின் உரிமையாளரான பாலாஜி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை