தமிழக செய்திகள்

இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லை டவுனில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

நெல்லை டவுன் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரின் மனைவி லட்சுமி (வயது 25). இவர்களுக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. 4 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று லட்சுமி செல்போனில் அதிகநேரம் பேசிக்கொண்டு இருந்ததை அவரின் தாய் கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த லட்சுமி, தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணம் முடிந்து 5 ஆண்டுகளே ஆவதால் நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்த உள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்