தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

ஜோலார்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 41). இவர், நேற்று முன்தினம் மண்டலவாடி ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளையகவுண்டனூர் பகுதியில் நடந்த எருதுவிடும் திருவிழாவ பார்க்க தனது மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். பூசாரிவட்டம் பகுதியில் சாலையோரம் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு விழாவை பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்ப மோட்டார்சைக்கிளை எடுக்க வந்தார். ஆனால், அங்கு நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவர் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். மேலும் வெள்ளையகவுண்டனூர் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசீலனை செய்தபோது, மோட்டார்சைக்கிளை திருடியவர் அடையாளம் தெரிந்தது. அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது, திருப்பத்தூரை அடுத்த ஏரிக்கரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் சுதாகர் (27) எனத் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கனகராஜின் மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு