தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

வாணியம்பாடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.

தினத்தந்தி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி- நேதாஜிநகர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் பலராமன் (வயது 28), கட்டிட மேஸ்திரி, இவர் தனது நண்பர்கள் நவீன்குமார், பாலகிருஷ்ணன் ஆகியோருடன் கோவிந்தபுரம் ஏரி பகுதியில் சென்று ஏரியில் மீன் பிடித்தனர். பின்னர் ஏரி பகுதியில் உள்ள பனைமரத்தில் நுங்குகளை பறிப்பதற்காக அருகில் உள்ள மூங்கில் குச்சி எடுத்து நுங்குகளை பறிக்க பலராமன் முயன்றார். அப்போது அங்கு சென்று கொண்டிருந்த உயர் மின்சார கம்பி மீது மூங்கில் குச்சி உரசியதால் மின்சாரம் தாக்கி பலராமன் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி டவுன் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த பலராமனுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு