தமிழக செய்திகள்

உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்களுக்கு ருத்ராட்ச தீட்சை ஜக்கி வாசுதேவ் வழங்கினார்

உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்களுக்கு ருத்ராட்ச தீட்சை ஜக்கி வாசுதேவ் வழங்கினார்.

தினத்தந்தி

சென்னை,

உலகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான மக்களுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் சக்திவாய்ந்த செயல்முறை மூலம் ருத்ராட்ச தீட்சை வழங்கினார். ஆதியோகி முன்பு நடந்த இந்நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் பங்கேற்று ருத்ராட்சத்தின் முக்கியத்துவம் குறித்து பேசியதாவது:-

ருத்ராட்ச விதைகள் இமயமலை பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இது இயற்கையாகவே தனித்துவமான அதிர்வுகளை கொண்டது. இந்த அதிர்வுகள் ஒரு மனிதர் தன் சக்தியை ஒருங்கமைத்து, அதை உறுதிப்படுத்த உதவுகிறது. இந்த சக்தி உங்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் போல் செயல்படும். ருத்ராட்சங்களில் ஒரு முகத்தில் இருந்து 14 முகம் வரை உள்ளது. ஆதியோகி ருத்ராட்ச தீட்சையில் உங்களுக்கு பஞ்சமுகி எனப்படும் 5 முக ருத்ராட்சத்தை அளித்துள்ளோம். குடும்ப மற்றும் சமூக சூழ்நிலைகளில் வாழ்பவர்களுக்கு இந்த 5 முக ருத்ராட்சம் மிகவும் சிறந்தது. 12 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சண்முகி எனப்படும் 6 முக ருத்ராட்சத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், ருத்ராட்சம் குறித்த பல்வேறு விதமான மூட நம்பிக்கைகள் மற்றும் சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. முறையாக பராமரிக்கும் வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு