ஏரிக்கரையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருப்பதாக கூறி இந்த ஷெட்டை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்து பொக்லைன் எந்திரம் கொண்டு இடித்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மூர்த்தி, பொக்லைன் எந்திரம் முன்பு சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் மூர்த்தி திடீரென தனது தலையில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே போலீசார் அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறித்ததுடன், அவரது தலையில் தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி உள்பட அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.