செய்திகள்

வைரங்களுக்காக 1,000 கிலோ நந்தி சிலையை திருடி சென்ற கும்பல்

ஆந்திர பிரதேசத்தில் வைரங்களுக்காக 1,000 கிலோ நந்தி சிலையை திருடி சென்ற 15 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது.

ராமசந்திரபுரம்,

ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராமசந்திரபுரம் நகரில் 400 வருடங்கள் பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் அமைந்து உள்ளது. இந்த பழமையான சிவன் கோவிலில் 1,000 கிலோ எடை கொண்ட நந்தி சிலை ஒன்று உள்ளது.

இந்த சிலைக்குள் வைரங்கள் உள்ளன என வதந்தி பரவியுள்ளது. இதனை தொடர்ந்து சிலர் கும்பலாக வந்து நந்தி சிலையை திருடி கொண்டு நீரோடை கரை பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு இந்த சிலையை பிரித்து உள்ளே தேடியுள்ளனர். ஆனால் அதனுள் விலை மதிப்புமிக்க எந்த கற்களும் இல்லை.

இந்த சம்பவத்தில் கோவில் அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் 15 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சிலை கடத்தலில் இன்னும் பலர் ஈடுபட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை