செய்திகள்

அமெரிக்காவில் பரிதாபம்: அகதிகள் படகு ஆற்றில் கவிழ்ந்து பச்சிளம் குழந்தை பலி

அமெரிக்காவில் அகதிகள் படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் பச்சிளம் குழந்தை ஒன்று பலியானது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள். அதனை தடுக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், அமெரிக்காவை நோக்கி படையெடுக்கும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில், மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் சிலர் அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் உள்ள ரியோ கிராண்டே ஆற்றை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைவதற்காக ரப்பர் படகில் பயணம் செய்தனர்.

படகில், 10 மாத பச்சிளம் ஆண் குழந்தை மற்றும் 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் இருந்தனர். ஆற்றில் நீரோட்டம் அதிவேகமாக இருந்ததால் படகு திடீரென கவிழ்ந்தது. இதில் அனைவரும் நீரில் மூழ்கினர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் எல்லையோர பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 6 வயது சிறுவன் உள்பட 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதே சமயம் 10 மாத பச்சிளம் குழந்தை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தது. விபத்து நடந்த ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த குழந்தையின் உடல் கரை ஒதுங்கியது.

மேலும் இந்த விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் மாயமாகினர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு