நல்லம்பள்ளி,
லாரி நேற்று தொப்பூர் கணவாயில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது. எள் மூட்டைகள் சாலையில் விழுந்தன. இந்த விபத்தில் நாமக்கல் கந்தபுரியை சேர்ந்த டிரைவர் பழனியப்பன்(வயது 50) காயமடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் சம்பவ இடத்திற்கு சென்று டிரைவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.