வேட்டவலம்,
வேட்டவலம் அருகே ராஜந்தாங்கலை அடுத்த தளவாகுளத்தில் தனியார் திருமண மண்டபம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 2வது மாடியில் கான்கிரீட் போடும் பணியில் கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது கான்கிரீட் தளம் முழுவதும் சரிந்து விழுந்தது. இதில் 7 கட்டிட தொழிலாளிகள் இடிபாடுகள் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த வேட்டவலம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.