செய்திகள்

மிகப்பெரிய பொறுப்பு என்பதை உணர்ந்து இருக்கிறேன்: ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த் நெகிழ்ச்சி

மிகப்பெரிய பொறுப்பு என்பதை உணர்ந்து இருக்கிறேன் என்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் 15-வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மீராகுமாரும் போட்டியிட்டனர்.

ஜனாதிபதி தேர்தலில் 4,896 எம்.பிக்கள், எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனர். நாடாளுமன்றத்தில் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 5 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 10,98,882 வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 702044 வாக்குகளும், மீராகுமார் 367314 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தம் பதிவான வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 65.65 சதவீதமும், மீராகுமாரும் 3சதவீதமும் பெற்றுள்ளனர். 3 லட்சத்து 34 ஆயிரத்து 730 வாக்குகள் வித்தியாசத்தில் ராம்நாத் கேவிந்த் வெற்றி பெற்றுள்ளார். 21 எம்.பிக்க்கள் 77 எம் எல்..ஏக்கள் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அனூப் அதிகாரபூர்வமாக அறிவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் வரும் ஜூலை 24-ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராம்நாத்கோவிந்த், "இது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணம். மிகப்பெரிய பொறுப்பு என்பதை உணர்ந்து இருக்கிறேன். எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமாருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை