தலைப்புச் செய்திகள்

விஜய் வாங்கும் சம்பளம் கருப்பா? வெள்ளையா? - ஜெயக்குமார் கேள்வி

ஆதவ் அர்ஜுனாவின் லாட்டரி பணத்தில்தான் தவெக கட்சியே நடக்கிறது என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலில் அதிமுக - திமுக இடையேதான் போட்டி. அதிமுகவை விமர்சிக்கும் விஜய் தனது சம்பளம் எவ்வளவு என வெளிப்படையாக கூறுவாரா?

விஜய் வாங்கும் சம்பளத்தில் கறுப்பு அதிகம். வெள்ளை குறைவு. விஜய் வாங்கும் சம்பளம் வெள்ளையா கருப்பா?எவ்வளவு வரி செலுத்துகிறார் எனச் சொல்ல முடியுமா?

யார் யாரை விமர்சிக்க வேண்டும் என விஜய்க்கு விவஸ்தை இல்லை. கரூர் சம்பவம் குறித்து கொஞ்சம் கூற குற்ற உணர்வின்றி 3-ம் ஆண்டு விழாவில் நடனம் ஆடுகிறார். விஜய் நடனத்தை 41 குடும்பங்கள் பார்த்தால் எவ்வளவு வருத்தப்படுவார்கள்.

நானும் ரவுடி தான் என்பது போல விஜய் பேசுகிறார். ஆதவ் அர்ஜுனாவின் லாட்டரி பணத்தில்தான் தவெக கட்சியே நடக்கிறது.

விசில் எதுக்கு அடிப்பாங்க? ஆபத்துல இருக்கும்போது அடிப்பாங்க உதவி உதவினு டைட்டானிக் படம் க்ளைமாக்ஸ்ல பாத்திருக்கீங்களா? விஜய் கட்சி ஆபத்துல இருக்கு. அதனால் விசில் அடிக்கிறாங்க.

இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தான் மற்றும் சீனா போல் ராகுல் காந்தி நடந்து கொள்கிறார்: பா.ஜ.க. குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலனில் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் சமரசம் செய்யாது: பிரதமர் மோடி

டெல்லி: ஹோலி, தீபாவளியில் மக்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர்கள் அறிவிப்பு

16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை; ஸ்பெயின் திட்டம்

இந்தியாவில் 2025-ல் 19 விமான விபத்துகள்: மத்திய அரசு தகவல்