ஜோகன்னஸ்பர்க்,
தென்னாப்பிரிக்காவின் டர்பன் மாகாண நெடுஞ்சாலையில் ஒரு மினிவேன் சென்று கொண்டிருந்தது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 30 பேர் பயணித்தனர். குவாசுலு-நடால் என்ற இடத்துக்கு அருகே கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் முன்னால் சென்ற காரில் உரசியது.
தொடர்ந்து நிற்காமல் சென்ற அந்த மினிவேன் எதிரே வந்த லாரி மீது நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், லாரி ஒரு வழிப்பாதையில் சென்றதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த விபத்தில் 14 மாணவர்கள் பலியாகினர். அடுத்த ஒரே வாரத்தில் தற்போது மீண்டும் கோர விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.