செய்திகள்

தேர்தல் நடைபெறும் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தொண்டர் மர்ம மரணம்; போலீசார் விசாரணை

மேற்கு வங்காளத்தில் 6வது கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜ.க. தொண்டர் மர்ம மரணம் அடைந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

நாடாளுமன்ற மக்களவைக்கான 6வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் பிரதமர் மோடி இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர்.

இந்த தேர்தல் பிரசாரத்தில் இரு கட்சிகளும் ஒன்றையொன்று கடுமையாக விமர்சனம் செய்து கொண்டன. அங்கு இன்று வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்கு பதிவுக்கான பணிகளில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தயாராக உள்ளனர்.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் ஜக்ராம் நகரில் கோபிபல்லபூர் என்ற பகுதியில் பா.ஜ.க. தொண்டர் ஒருவர் நேற்றிரவு இறந்து கிடந்துள்ளார். அவர் ராமன் சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சி தொண்டர் மர்ம மரணம் அடைந்துள்ளது அங்கு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்