உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் போதிய உணவு இன்றி 1 கோடி குழந்தைகள் தவிப்பு

ஆப்கானிஸ்தானில் போதிய உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் 1 கோடி குழந்தைகள் தவித்து வருகின்றனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான போரில் ஆட்சி அதிகாரம் தலீபான்கள் அமைப்பிடம் சென்றுள்ளது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் போதிய உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளின்றி 5 வயதுக்கு உட்பட்ட 1 கோடி குழந்தைகள் தவித்து வருகின்றனர் என யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அந்நாட்டுக்கான யுனிசெப் அமைப்பின் தலைமை தொடர்பு அதிகாரி சாம் மோர்ட் கூறும்போது, அடிப்படை வசதிகள் போதிய அளவில் கிடைக்காத சூழலில் பல குழந்தைகள் ஊட்டச்சத்து இன்றி மருத்துவமனை படுக்கைகளில் இருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. அவர்களுக்கு மனிதநேய உதவி அளிக்க வேண்டிய அவசர தேவை உள்ளது. வறட்சியால் குடிநீர் கிடைக்காமலும் உள்ளனர் என கூறியுள்ளார்.

கடந்த மாதத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறையுடன் கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்று எண்ணற்ற மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை