உலக செய்திகள்

அங்கோலா நாட்டில் தங்க சுரங்கத்தில் விபத்து; 11 பேர் பலி

அங்கோலா நாட்டின் ஹம்போ மாகாணத்தில் உள்ள தங்க சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 11 பேர் உயிரிழந்தனர்.

ஹம்போ,

அங்கோலா நாட்டின் ஹம்போ மாகாணத்தில் சட்டவிரோதமாக தங்க சுரங்கங்களில் பணியாற்றுவதால் ஏற்படும் விபத்துகளில் கடந்த மூன்று மாதங்களில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.அந்த பகுதியின் உள்ளூர் காவல்துறை இந்த தகவலை நேற்று நிருபர்களுக்கு தெரிவித்தது.

ஹம்போ மாகாணத்துக்கான தேசிய காவல்துறையின் ஆணையர் பிரான்சிஸ்கோ ரிபாஸ் நிருபர்களிடம் பேசுகையில், அங்கோலா நாட்டின் பைலுண்டோ, உகுமா, சின்சென்ஜ், லாங்கோன்ஜோ, காலா, ஷிகாலா, சோலோஹங்கா மற்றும் ஹம்போ ஆகிய மாகாணங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.அங்கோலா நாட்டிலுள்ள இந்த பகுதிகளில் அதிக அளவில் கைவினை தங்க சுரங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

சுமார் 2000 சுரங்க தொழிலாளர்கள் சட்டவிரோதமாக தங்க சுரங்கங்களில் பணியாற்றுகின்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஹம்போ மாகாணத்தின் தேசிய காவல்துறை,உள்ளூர் மக்கள் சட்டவிரோதமாக சுரங்க பணியில் ஈடுபடுவதை தடுக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை