உலக செய்திகள்

பாகிஸ்தான்; நிலக்கரி சுரங்க விபத்தில் 16 பேர் பலி

பாகிஸ்தானில் நிகழ்ந்த நிலக்கரி சுரங்கத்தில் விபத்தில் 16 பேர் பலியாயினர். #Pakistan #Quetta

குவாட்டா,

பாகிஸ்தானில் உள்ள குவாட்டா நகரில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி16 பேர் பலியாயினர்.

பாகிஸ்தானில் குவாட்டா நகரின் மார்வார்த் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து சம்பவம் மீத்தேன் வாயு வெடிப்பின் காரணமாக நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மீத்தேன் வாயு வெளிப்பட்ட போது சுரங்கத்தின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தின் காரணமாக சுரங்கத்தில் சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய 16 தொழிலாளர்கள் பலியாயினர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தின் போது கிட்டத்தட்ட 25 தொழிலாளர்கள் சுரங்க பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்க்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருவதாகவும், மேலும் பலரின் உடல்கள் சுரங்கத்தின் உள்ளே புதைந்திருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை