உலக செய்திகள்

உக்ரைனில் உயிரிழந்த பின்னும் நபருக்கு 28 முறை உடலில் கொரோனா தொற்று உறுதி

உக்ரைனில் உயிரிழந்த பின் நபருக்கு 28 முறை மேற்கொண்ட பரிசோதனையில் உடலில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஜெருசலேம்,

உக்ரைன் நாட்டை சேர்ந்த 41 வயது நபர் ஒருவர் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் இத்தாலிய கடற்கரையில் தனது நண்பருடன் நீந்தி குளிக்க சென்றுள்ளார். எனினும், இதில் அவர் காணாமல் போயுள்ளார். 16 மணிநேரத்திற்கு பின்பு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. கடலில் நீந்த சென்ற அவர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளார்.

இதன்பின் உடலில், இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதில், 28 முறை அவரது உடலில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. உயிரிழப்பதற்கு முன் அவர், முழு அளவில் அறிகுறியற்றவராகவே இருந்துள்ளார் என இறப்பு பதிவு அறிக்கை தெரிவிக்கிறது. குறைந்த அளவில் வைரசானது பாதித்து இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அந்த அறிக்கையில், உண்மையில் 41 நாட்கள் கடந்த பின்பும், மனித ஆர்.என்.ஏ.வானது பரிசோதனையில் அறியப்படவில்லை. இதற்கு, கொரோனா பரிசோதனையில் பாதிப்பு உள்ளது என்று பொருள். மனித செல்களை கண்டறிய முடியாத நிலை இருந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பு, இங்கிலாந்தில் கடந்த 2020ம் ஆண்டு ஆய்வாளர்கள், உயிரிழந்த 50 வயது நபருக்கு 27 நாட்களாக நடத்திய கொரோனா பரிசோதனையில் பாதிப்பு உள்ளது தெரிய வந்தது. இதனால், உயிரிழந்த பின்னரும் உடலில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்